நாமக்கல்லில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
நாமக்கல்லில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை தாங்கி, நாமக்கல் நேரு பூங்காவில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மாவட்ட இளைஞரணி தலைவர் விநாயகமூர்த்தி, உயர்மட்டகுழு உறுப்பினர் நடேசன், வட்டார தலைவர்கள் குப்புசாமி, இளங்கோ, சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடக்கப்பள்ளிகள் சங்கம்
இதேபோல் நாமக்கல் மாவட்ட சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் சங்கம் சார்பிலும் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட தலைவர் திருவின் மணாளன் தலைமை தாங்கி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ஈஸ்வரி இளங்கோ மற்றும் நிர்வாகிகள் மணி, சீனிவாசன், சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு வருகிற 21-ந் தேதி குமாரபாளையத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் அமைச்சர் தங்கமணி பரிசு வழங்க இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம்
இதேபோல் காமராஜர் தொண்டர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அதன் அமைப்பாளர் ஏகாம்பரம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. விடுதலை களம் அமைப்பின் சார்பில் நடந்த விழாவில் அதன் நிறுவன தலைவர் நாகராஜன் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் கனகராசு, செல்வராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story