திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி புத்தூர் சண்முகாநகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வருபவர் கபிலன் (வயது 38). இவர் மன்னார்புரம் பகுதியில் கார் உதிரி பாக கடை நடத்தி வருகிறார். இவர், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 12-ந் தேதி கரூர் மாவட்டம் நங்கவரத்திற்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து கடந்த 14-ந் தேதி வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று அவர் பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, தலா ½ பவுன் எடையுள்ள தங்க மோதிரம் உள்பட மொத்தம் 5½ பவுன் நகைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
போலீசார் விசாரணை
நகைகள் திருட்டு போனது குறித்து அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கபிலன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாலாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தங்களது கைவரிசையை காட்டி நகைகளை திருடி சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதைதொடர்ந்து நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story