வானவில் : ரோபோ மாஸ்டர்
சிறுவர்களுக்கு எப்போதுமே விளையாட்டு கருவிகள் மீது ஆர்வம், விருப்பம் அதிகம். விளையாட்டு கருவிகள் மூலமாக சிறுவர்களுக்கு கல்வியை கற்றுத் தரும் முறையை பல கல்வி நிறுவனங்கள் மேலை நாடுகளில் பின்பற்றுகின்றன.
விளையாட்டாக, விளையாட்டுடன் கற்றுத் தருவது குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. குழந்தைகளும் ஆர்வத்தோடு கவனிக்கின்றனர். நவீன உலகில் குழந்தைகளுக்கு கற்றுத்தர வந்துள்ளதுதான் ‘ரோபோ மாஸ்டர்’.
குழந்தைகளுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்டப் பாடங்களை மிக எளிமையான வகையில் சொல்லித் தருகிறது இந்த ரோபோ மாஸ்டர். கம்ப்யூட்டர் புரோகிராமிங்கையும் கற்றுத் தருகிறது. இந்த இயந்திர ஆசிரியரின் விலை ரூ.35,000.
Related Tags :
Next Story