வானவில் : ஸ்மார்ட் சீலிங் பேன்


வானவில் : ஸ்மார்ட் சீலிங் பேன்
x
தினத்தந்தி 17 July 2019 7:25 PM IST (Updated: 17 July 2019 7:25 PM IST)
t-max-icont-min-icon

நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் பொருட்கள் அழகாகவும் வித்தியாசமானதாகவும் இருக்க வேண்டும்.

ஸ்மார்ட் யுகத்தில் அந்தப் பொருளை ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்த முடிந்தால் அதுதான் இன்றைய இளைய சமுதாயத்தின் தேவையாக உள்ளது.

அந்த வகையில் வீட்டில் பயன்படுத்தும் சீலிங் பேனை ஸ்மார்ட்போனில் கட்டுப்படுத்தும் வகையில் தயாரித்துள்ளது சிகே பிர்லா குழுமத்தின் அங்கமான ஓரியண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘ஏரோ ஸ்லிம்’ என்ற பெயரில் வந்துள்ள இந்த பேன் பார்ப்பதற்கே மிக அழகிய வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை உங்கள் வீட்டில் மாட்டினாலே வீடு புதுமை பெறும். நீங்கள் விரும்பும் வரவேற்பரையிலோ அல்லது உங்கள் படுக்கையறையிலோ நிறுவி பார்த்து ரசிக்கலாம். டெலஸ்கோப்பிக் அட்ஜஸ்டபிள் டிசைன் மற்ற பேன்களில் இல்லாத சிறப்பம்சமாகும். இதன் இறக்கைகள் மெல்லியதாகவும் நீளமானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஏரோ டைனமிக் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிளேடுகள் துருப்பிடிக்காத வகையில் பாலிமர் கூட்டு சேர்மத்தால் தயாரிக்கப்பட்டது. இது 45 வாட் மின்சாரத்தை மட்டுமே நுகரும். இதில் உள்ள இன்வெர்டர் மோட்டார் 40 சதவீத அளவுக்கு மின்சாரத்தை மிச்சம் செய்ய உதவும்.

இந்த ஏரோஸ்லிம் பேனை இயக்க சிறிய வெள்ளை நிற ரிமோட்டும் வழங்கப்படுகிறது. பேனை ஆன், ஆப் செய்வதற்கு மட்டுமின்றி சுழல வேண்டிய நேரத்தையும் (டைமர்) நிர்ணயிக்க முடியும்.

இதில் பேன் மட்டும் சுழல வேண்டுமா அல்லது விளக்கு மட்டும் எரிய வேண்டுமா என்பதையும் தீர்மானிக்கலாம். இந்த மின் விசிறியின் சுழற்சி ஒரே திசையில் இருக்காது. இது மாற்று திசையிலும் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் காற்று ஓட்டம் மிகச் சிறப்பாக இருக்கும்.

இதில் டர்போ மோட், ஸ்லீப் மோட், பிரீஸ் மோட் என பல வகையான சுழலும் நிலைகள் உள்ளன. இதில் விருப்பமானவற்றை தேர்வு செய்யலாம். குழந்தைகள் தூங்கும் அறையில் பேன் சுழற்சியை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும். இந்த செயலியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பேன்களை கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் சிறப்பம்சமாகும்.

இப்போது பல வீடுகளில் அலெக்ஸா அல்லது கூகுள் அசிஸ்ட் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அத்தகையோர் இந்த ஸ்மார்ட் பேனை ஏதேனும் ஒன்றுடன் இணைத்து செயல்படுத்த முடியும். இரண்டு வருட உத்தரவாதம் மற்றும் இலவசமாக இன்ஸ்டால் செய்யும் சேவையுடன் வழங்குகிறது ஓரியன்ட் நிறுவனம்.


Next Story