விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்


விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்
x
தினத்தந்தி 18 July 2019 4:30 AM IST (Updated: 18 July 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்தனர்.

மன்னார்குடி,

மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உள்ள விளையாட்டு மைதானம் முறையாக பராமரிக்கப்படவில்லை. விளையாட்டு உபகரணங்கள் போதிய இருப்பு இல்லை. எனவே விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும். விளையாட்டு உபகரணங்கள் போதுமான இருப்பு வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவ-மாணவிகளுடன் கல்லூரி முதல்வர் ரவி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அவர் உறுதி அளித்தார். ஆனாலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு வீட்டுக்கு சென்றனர். இதனால் நேற்று கல்லூரி நடைபெறவில்லை.

Next Story