நரிக்குறவர்கள் நலவாரிய உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆனந்த் தகவல்


நரிக்குறவர்கள் நலவாரிய உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆனந்த் தகவல்
x
தினத்தந்தி 18 July 2019 4:15 AM IST (Updated: 18 July 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குறவர்கள் நலவாரிய உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்,

நரிக்குறவர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் விபத்து மரணத்துக்கு ரூ.1 லட்சம், விபத்தால் ஏற்படும் ஊனத்துக்கு, ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரணத்துக்கு ரூ.15 ஆயிரம், ஈமச்சடங்கு செலவுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

10-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகளுக்கு ரூ.1000, இதே வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000, பிளஸ்-1 படித்து வரும் மாணவிகளுக்கு ரூ.1000, பிளஸ்-2 படித்து வரும் பெண்களுக்கு ரூ.1,500, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1500, முறையான பட்டப்படிப்புக்கு ரூ.1500, மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்டப்படிப்புக்கு ரூ.1,750, முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ. 4 ஆயிரம், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை

தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.6 ஆயிரம், தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.6 ஆயிரம், மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.8 ஆயிரம், ஐ.டி.ஐ. அல்லது தொழிற்பயிற்சி படிப்புக்கு ரூ.1000, மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ. அல்லது தொழிற்பயிற்சி படிப்புக்கு ரூ.1200 என கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வீதம் 6 மாதங்களுக்கு ரூ.6 ஆயிரம், கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு ஏற்பட்டால் ரூ.3 ஆயிரம், மூக்கு கண்ணாடி செலவுத்தொகையை ஈடு செய்வதற்கு ரூ.500, முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.1000, தனிநபர் தொழில் தொடங்க முழு மானியம் ரூ. 7,500, குழுவாக தொழில் தொடங்க மானியம் ரூ.10 ஆயிரம் தனிநபருக்கு அல்லது ரூ.1,25,000 அதிகபட்சமாக குழுவுக்கு வழங்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்ட நரிக்குறவர் இன மக்கள் உரிய படிவத்தில் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்வதோடு, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story