மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் தெப்ப திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தெப்ப திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் ராஜகோபாலசாமி, தங்க சூரியபிரபை, வெள்ளி சேஷ வாகனம், தங்க கருடன், யானை வாகனம், வெட்டு குதிரை வாகனம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராஜகோபாலசாமி தெப்பத்தில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது.
எழுந்தருளினார்
அப்போது ஹரித்ரா நதி தெப்ப குளத்தில் அமைக்கப் பட்ட தெப்பத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் கிருஷ்ணர் அலங்காரத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சங்கீதா, மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர் பாரதிஜீவா, செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

Related Tags :
Next Story