ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை சீரமைக்க நிதி ஒதுக்கீடு; பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை சீரமைக்க தமிழக அரசு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்று ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய். இந்த கண்மாய் நீர்வரத்துக்காக வைகை, சருகணி ஆகிய ஆறுகளில் இருந்து இரு கால்வாய்களை வெட்டி இணைத்துள்ளனர். ராமநாதபுரம்-நயினார்கோவில் சாலையில் பாண்டியூருக்கு அருகில் வைகை ஆற்றில் இருந்து செல்லும் கீழநாட்டார் கால்வாய் மூலம் தண்ணீர் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு செல்கிறது. இக்கால்வாய் பாண்டியூர், சித்தனேந்தல், பந்தப்பனேந்தல், தவளைக்குளம், நகரம், அரியாங்கோட்டை ஆகிய ஊர்களின் வழியாக சென்று வாதவனேரி என்ற ஊரில் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை அடைகிறது. இந்த கால்வாய் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதேபோல சருகணி ஆற்றில் இருந்து வரும் ஒரு கால்வாய் கல்லடித்திடல் என்ற இடத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதன் ஒரு பகுதி கண்மாய்க்குள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் மற்றொரு பகுதி கோட்டைக்கரை ஆறாக கடலுக்கு செல்லுமாறு அமைத்துள்ளனர். இக்கண்மாயின் நீர்பிடிப்பு பரப்பு 147 சதுர மைல் ஆகும். இந்த கண்மாய் நிரம்பும்போது அதில் இருந்து 72 கண்மாய்களுக்கு நீர் செல்லவும் உபரி நீர் கடலுக்கு செல்லவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக்கண்மாய் சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் மிகச்சிறப்பாக பேணப்பட்டு நீரை வெளியேற்ற 48 மடை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் முறையாக தூர்வாரப்படாததால் காட்டுக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தும் மேடாகியும் தூர்ந்து போய் காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் இந்த கண்மாயில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை இருந்து வந்தது. மேலும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் அவை ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை சென்றடைவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. இதனால் அந்த கண்மாய் அனைத்து காலக்கட்டத்திலும் வறண்டு காணப்பட்டது. இதனை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இதுகுறித்து ‘தினத்தந்தி’யிலும் செய்தி வெளியிடப்பட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் ரூ.19 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் இப்பகுதி மக்களும், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசின் இந்த அறிவிப்புக்கும், இப்பகுதி மக்களின் கோரிக்கையை சுட்டிக்காட்டிய ‘தினத்தந்தி’க்கும்அப்பகுதி மக்களும், பாசன விவசாய சங்க நிர்வாகிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story