மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி,
மத்திய அரசின் பட்ஜெட் தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் விரோதமான பட்ஜெட் என்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலையில் இருப்பதாகவும் ஏ.ஐ.டி.யு.சி. குற்றஞ்சாட்டி உள்ளது. இதை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
புதுவையிலும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயல் தலைவர் அபிசேகம், துணை தலைவர்கள் கலியபெருமாள், சந்திரசேகரன், ரவி, முருகன், செல்வராசு, சேகர், கண்ணன், செயலாளர்கள் தயாளன், செந்தில்முருகன், ரவிச்சந்திரன், நளவேந்தன், முத்துராமன் ஆகியோர் மத்திய பட்ஜெட்டை கண்டித்து உரையாற்றினர்.

Related Tags :
Next Story