மாவட்ட செய்திகள்

ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது + "||" + Kidnapping and harassment a woman; Driver arrested

ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது

ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது
ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பண்டிதமேடு கிராமத்தை சேர்ந்த 33 வயது பெண் தனது 5 வயது மகளுடன் கடந்த 4-ந் தேதி திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.


இது குறித்து அவரது கணவர் மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில், தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்யும் வடக்கு மாமல்லபுரம் அண்ணல் காந்தி தெருவை சேர்ந்த சரவணன் என்கிற ஸ்கைலப் (40) என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் மகளை கடத்தி சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையில், சரவணன் கன்னியாகுமரி, கேரள மாநிலம் கோவளம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரிலும் கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது.

அப்போது சரவணன் அந்த பெண்ணுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் பெண்ணிடம் இருந்த ¼ பவுன் மோதிரத்தையும் விற்றார். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சரவணன் எப்போதும் தாடியுடன் காணப்படும் அவர் தன்னை யாரும் அடையாளம் காணாத வகையில் மொட்டை போட்டுள்ளார்.

இந்த நிலையில் மதுராந்தகத்தில் பதுங்கி இருந்த சரவணனை போலீசார் கைது செய்தனர். பின்பு கடத்தப்பட்ட தாய், குழந்தையை மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம்; 3 பேர் கைது
அரியலூரில் காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து எழுதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. பணம், நகை கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலி கொன்று புதைப்பு அரசு ஊழியர் கைது
பொன்னமராவதி அருகே பணம், நகை கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலியை கொன்று புதைத்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. திருச்சியில் தனியார் வங்கியில் ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்தவர் கைது பரபரப்பு தகவல்கள்
திருச்சியில் தனியார் வங்கியில் ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார்.
4. விவசாய கடன் வாங்கி தருவதாக ரூ.22½ லட்சம் மோசடி; 2 பேர் கைது
விவசாயத்திற்கு வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ. 22½ லட்சத்தை மோசடி செய்ததாக கம்பத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கோட்டக்குப்பம் அருகே, காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.