பன்வெலில் கணவருடன் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் உடல் மீட்பு
பன்வெலில் ஆற்று வெள்ளத்தில், கணவருடன் மோட்டார் சைக்கிளோடு அடித்து செல்லப்பட்ட பெண்ணின் உடல் 30 கி.மீ. தூரத்தில் உள்ள பேலாப்பூரில் மீட்கப்பட்டுள்ளது.
மும்பை,
நவிமும்பை உம்ரோலி பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (வயது30). இவர் சி.பி.டி. பேலாப்பூரில் உள்ள எலக்ட்ரானிக் ஷோரூமில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரிகா (28). கணவர், மனைவி இருவரும் கடந்த 9-ந் தேதி பன்வெல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அங்குள்ள காடி ஆற்றுப்பாலத்தை கடந்து கொண்டிருந்த போது தம்பதியை மோட்டார் சைக்கிளுடன் வெள்ளம் அடித்து சென்றது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜூய் காமோதே பகுதியில் உள்ள கழிமுகப்பகுதியில் ஆதித்யா உடல் மீட்கப்பட்டது.
சரிகாவை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், சிட்கோ தீயணைப்பு துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் சி.பி.டி. பேலாப்பூர் பகுதியில் உள்ள கழிமுகப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில், அவர் பன்வெல், காடி ஆற்றுப்பாலத்தில் இருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆதித்யாவின் மனைவி சரிகா என்பது தெரியவந்தது. ஆதித்யாவின் உடல் காடி ஆற்றுப்பாலத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், சரிகாவின் உடல் 30 கி.மீ. தொலைவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story