புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் மாற்றப்பட்டனர்
புதுச்சேரியில் தலைமை தேர்தல் அதிகாரி உள்பட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி,
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பு செயலாளர் ராகேஷ் குமார் சிங் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
புதுவை மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு ஐ.ஏ.எஸ். அந்தமான் நிக்கோபார் தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் புதுவையில் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான தர்சம் குமார் டெல்லிக்கும், ஜவகர் மிசோரத்திற்கும், பார்த்திபன் அருணாசலபிரதேசத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக டெல்லியில் இருந்து சுர்பிர் சிங், மகேஷ், பூர்வா கார்க் மற்றும் சத்தீஸ்கரில் இருந்து அர்ஜூன் சர்மா ஆகியோர் புதுச்சேரிக்கு அதிகாரிகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா மிசோரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சத்தீஸ்கரில் இருந்து நிகரிகா பட் புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story