“சிறப்பாக பணியாற்றிய 66 போலீசாருக்கு வெகுமதி” போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் வழங்கினார்


“சிறப்பாக பணியாற்றிய 66 போலீசாருக்கு வெகுமதி” போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் வழங்கினார்
x
தினத்தந்தி 18 July 2019 9:45 PM GMT (Updated: 18 July 2019 8:18 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 66 போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலையில் போலீஸ் அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் மற்்றும் பல்வேறு அலுவல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் வழக்குகளை விசாரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

அதன் பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி, குலசேகரப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ராஜபால், விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடி தென்பாகம் ராஜாமணி, தூத்துக்குடி சிப்காட் முத்துகணேஷ், சந்திரமூர்த்தி, ராஜா, ஸ்ரீவைகுண்டம் பெருமாள், ஆழ்வார்திருநகரி சிவலிங்கப்பெருமாள், நாரைக்கிணறு ரமேஷ், தருவைக்குளம் முத்துகுமார் உட்பட 66 பேருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு குமார், நிர்வாகம் பொன்ராமு, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், விளாத்திக்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story