மாவட்ட செய்திகள்

நெல்லை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Near Nellai The police Suicide by hanging

நெல்லை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை,

நெல்லை வண்ணார்பேட்டை எட்டுத்தொகை தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 44). இவர் நெல்லை அருகே உள்ள தாழையூத்து போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகும் பணியை மேற்கொண்டார். அவர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் நண்பரின் அறையில் தங்கியிருந்து வந்தார்.

இந்த நிலையில் ராஜாராம் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று மதியம் அறைக்கு சென்று பார்த்த நண்பர், ராஜாராம் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் அங்கு விரைந்து சென்று, ராஜாராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாராம் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ராஜாராம் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதை போலீசார் கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜாராமுக்கு சண்முகசுந்தரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். சண்முகசுந்தரி தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவுத்துறையில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.