கும்பகோணத்தில் இடிந்து விழும் நிலையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அதிகாரிகள் கவனிப்பார்களா?


கும்பகோணத்தில் இடிந்து விழும் நிலையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அதிகாரிகள் கவனிப்பார்களா?
x
தினத்தந்தி 19 July 2019 4:00 AM IST (Updated: 19 July 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், அரசு ஊழியர்களுக்கான வாடகை குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. 1977-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த குடியிருப்பில் மொத்தம் 132 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள வீடுகள் அனைத்திலும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் குடியிருந்து வருகின்றனர்.

தற்போது குடியிருப்பில் உள்ள வீடுகள் பல இடிந்து விழும் நிலையில் உள்ளது. வீடுகளின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன.

கோரிக்கை

இந்த குடியிருப்பில் உள்ள சில வீட்டின் ஜன்னல்கள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளன. இதனால் வீடுகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதனால், வீடுகளில் குடியிருப்பவர்கள் ஜன்னல்களுக்கு பதிலாக துணிகளை போட்டு மறைக்கும் சூழ்நிலை உள்ளது.

மேலும் வீடுகளில் உள்ள கான்கிரீட் காரைகள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழ்நிலை உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. வீடுகள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்படும் முன்பு அதிகாரிகள் கவனித்து, குடியிருப்பு முழுவதையும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story