மது விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது


மது விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 20 July 2019 4:00 AM IST (Updated: 19 July 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மது பதுக்கி விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 190 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சேலம், 

சேலம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் ஆனந்தா பாலம் பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு வாலிபர் ஒருவர் மதுபானம் பதுக்கி விற்பனை செய்வது தெரிந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்தி (வயது 26) என்று தெரிந்தது. இதையொட்டி அவரை கைது செய்து அவரிடம் இருந்து 118 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதே போன்று கிச்சிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி தலைமையில் போலீசார் பஞ்சப்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சாந்தா (54) என்பவர் வீட்டில் மது பதுக்கி விற்றது தெரிந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் பொன்னம்மாபேட்டை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கார்பெட் வீதியை சேர்ந்த ராஜசேகர் (38) என்பவர் அந்த பகுதியில் மதுபதுக்கி விற்றதை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்து அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் வேம்படிதாளம் பகுதியில் சோதனை நடத்தினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (40), அழகாபுரத்தை சேர்ந்த தைலம்மாள் (68) ஆகிய 2 பேரை கைது செய்து 54 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story