கொளத்தூர், சிங்கபுரம், தும்பல் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


கொளத்தூர், சிங்கபுரம், தும்பல் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 July 2019 3:45 AM IST (Updated: 19 July 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர், சிங்கபுரம், தும்பல் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சேலம், 

கொளத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொளத்தூர், பெரியதண்டா, நீதிபுரம், காவேரிபுரம், சின்னதண்டா, கண்ணாமூச்ச்சி, கோவிந்தபாடி, தின்னப்பட்டி, பாலமலை, அய்யம்புதூர், ஆலமரத்துப்பட்டி, சுப்பிரமணியபுரம், பண்ணவாடி, குரும்பனூர் மற்றும் சவுரியார்பாளை யம், மூலக்காடு, மாசிலாபாளையம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல சிங்கபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிங்கபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், புழுதிக் குட்டை, குறிச்சி, பள்ளத்தானூர், முத்தம்பட்டி, சின்னமநாயக்கன்பாளையம், வேப்பிலைப்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, மேற்குராஜாபாளையம், வெள்ளாளப்பட்டி, புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இதேபோல தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை தும்பல், பனைமடல், எடப்பட்டி, மாஞ்சி, சேலூர், பாப்பநாயக்கன்பட்டி, வெள்ளாளப்பட்டி, செக்கடிப்பட்டி, தாண்டானூர், ஈச்சங்காடு, மண்ணூர், கருமந்துறை, யு.குமாரபாளையம், கலக்காம்பாடி, பகடுப்பட்டு, குண்னூர் மற்றும் இதர சிற்றூர்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை செயற்பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.

Next Story