ஜவுளிக்கடை உரிமையாளரிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு


ஜவுளிக்கடை உரிமையாளரிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 20 July 2019 3:45 AM IST (Updated: 20 July 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலையில் முகவரி கேட்பது போல் நடித்து ஜவுளிக்கடை உரிமையாளரிடம் 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விராலிமலை, 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(வயது 47). இவர் விராலிமலை பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். ஜெய்சங்கர், கடந்த 17-ந் தேதி இரவு வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரியை கேட்பதுபோல் நடித்து ஜெய்சங்கரை தாக்கிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Next Story