திருவள்ளூர் மாவட்டத்திற்கு 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்திற்கு 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 July 2019 4:00 AM IST (Updated: 20 July 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

ஆடி கிருத்திகை விழா திருவள்ளூர் மாவட்டத்திற்கு 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக் குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் இந்த மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு அன்றைய தினம் செயல்பட வேண்டும். இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு அடுத்த மாதம் 17-ந் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story