கடல் சாகச பயணம் நிறைவு: என்.சி.சி. மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி கொடுக்கப்படும் - நாராயணசாமி தகவல்
ராணுவத்தில் உள்ள பயிற்சிகள் அனைத்தும் என்.சி.சி. மாணவர்களுக்கும் கற்று கொடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவையில் இருந்து ஆண்டுதோறும் என்.சி.சி. மாணவர்கள் பாய்மர படகில் கடல் சாகச பயணம் மேற்கொள்ளுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கடல் சாகச பயணத்தை அவர்கள் கடந்த 9-ந் தேதி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தொடங்கினர். இதில் 60 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
கடலூர், பரங்கிப்பேட்டை, பாழையார், தரங்கம்பாடி, காரைக்கால் சென்று மீண்டும் அதே வழியாக திரும்பிய அவர்கள் நேற்று காலை புதுவை வந்தனர். கடல் சாகச பயணத்தை முடித்து விட்டு புதுவைக்கு திரும்பிய மாணவ-மாணவிகளை வரவேற்பு வழங்கும் நிகழ்ச்சி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கொடியசைத்து மாணவ-மாணவிகளை வரவேற்று அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடல் சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்த மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதில் 400 கி.மீ. பயணம் செய்துள்ளனர். இந்த பயணம் மிகவும் கடினமானது. ஏனென்றால் இவர்கள் பயணம் செய்து வந்த கடல் பகுதி சீற்றம் அதிகமாக காணப்படும். காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். இந்த பயணத்தின் மூலம் அவர்களுக்கு பல விதமான புது அனுபவங்கள் கிடைத்திற்கும். தேசிய மாணவர் படை என்பது ராணுவத்தில் பாதி போன்றது. ராணுவத்தில் உள்ள பயிற்சிகள் அனைத்தும் இந்த மாணவர்களுக்கும் கற்று கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் என்.சி.சி. கமாண்டர் ஜெயச்சந்திரன், கமாண்டிங் அதிகாரி தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story