விருதுநகரில் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு பணியை கண்காணிக்க வலியுறுத்தல்


விருதுநகரில் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு பணியை கண்காணிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 July 2019 10:28 PM GMT (Updated: 19 July 2019 10:28 PM GMT)

விருதுநகர் நகராட்சி பகுதியில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணிகளை முறையாக கண்காணிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகரில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 12 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி ரூ.6½ கோடிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை செய்வதற்கு பல்வேறு விதிமுறைகள் ஒப்பந்ததாரர் களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பணிகள் விதிமுறைப்படி செய்யப்படவில்லை என்றும் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்யப்படுவதாகவும் புகார் கூறப்படும் நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் எச்சரித்தும் வீட்டுக்காரர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டு இணைப்புகள் நிர்ணயிக்கப்பட்டபடி கொடுக்கப்படாமல் உள்ளதால் வீடுகளில் இருந்து கழிவுநீர் முறையாக பாதாள சாக்கடை பிரதான குழாய்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

எனவே நகராட்சி நிர்வாகம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணிகளை முறையாக கண்காணிக்க நடவடிக்கை எடுப்பதுடன் இந்த பணிகளை விரைந்து முடித்து திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story