குடிமராமத்து பணியில் அரசியல் தலையீடு; குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
குடிமராமத்து பணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் அளித்தனர்.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜசேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு குறைகளை பட்டியலிட்டு பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
குடிமராமத்து பணிகள் மதுரை மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. விவசாயிகளின் பங்களிப்போடு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதல்- அமைச்சரும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதற்கு நேர்மாறாக பணிகள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட கண்மாய்களின் பாசனதாரர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து தான் பணிகள் நடக்க வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாத நபர்களை கொண்டு சங்கம் அமைத்து தூர்வாரும் பணியினை தொடங்குகிறார்கள்.
அரசியல் தலையீடு அதிக அளவில் உள்ளது. அரசியல்வாதிகளுக்கும், கண்மாய் தூர்வாரும் பணிக்கும் என்ன சம்பந்தம். குறிப்பாக உசிலம்பட்டி பகுதியில் அரசியல் தலையீடு மிக அதிகமாக உள்ளது. அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகளும் துணை போகிறார்கள். ஒரு உதவி பொறியாளர்கள் அவராகவே சங்க தலைவரை நியமனம் செய்கிறார். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூட்டணி அமைத்து குடிமராமத்து பணியினை சீர்குலைக்கிறார்கள். அதனை கலெக்டர் தடுத்து நிறுத்த வேண்டும்.
வைகை அணையில் 22 அடிக்கு மண் மேவி கிடைக்கிறது. எனவே அணையினை தூர்வார வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே உடனடியாக வைகை அணை தூர்வாரும் பணியினை தொடங்க வேண்டும்.
பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில்லை. முல்லை பெரியாறு அணையில் திருமங்கலம், கள்ளந்திரி, மேலூர் பாசன விவசாயிகளுக்கு தான் முன்னுரிமை அளித்து தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது தேனி மாவட்டம் பயன் அடையும் வகையில் பி.டி.ஆர்.கால்வாய், 18-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கிறார்கள். தேனி அமைச்சரின் பேச்சை கேட்டு அதிகாரிகள் அவர்கள் மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். எனவே பெரியாறு அணையில் இருந்து அரசாணைப்படி தான் தண்ணீர் திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
கலெக்டர் ராஜசேகர் பேசும் போது, குடிமராமத்து பணி விவசாய குழுக்கள் மூலம் தான் செயல்படுத்தப்படும் என்றார். பெரியாறு-வைகை வடி நிலகோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன் பேசும் போது, வைகை அணையை தூர்வாருவதற்கு அரசிடம் 2 திட்டங்கள் பரிசீலனையில் உள்ளது. எனவே அணையை தூர்வாரும் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.
கூட்டத்தில் ஒரு விவசாயி பேசும் போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே அந்த திட்டத்தினை நிறுத்த வேண்டும் என்றார். இதற்கு கூட்டத்தில் இருந்த ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 100 நாள் திட்டம் ஏழை விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. அதனை நிறுத்துங்கள் என்று சொல்வது தவறு என்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர்.
அதே போல் ஒரு விவசாயி பேசும் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் எனது நிலத்தில் பண்ணை குட்டை அமைத்தேன். ஆனால் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அந்த பண்ணை குட்டைக்கு சிலர் போலீ ஆவணம் தயாரித்து பணம் பெற்று கொண்டனர் என்றார்.

Related Tags :
Next Story