மேனாங்குடி, மூங்கில்குடியில், குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு
மேனாங்குடி, மூங்கில்குடியில் பாசனத்தாரர் சங்கம் மூலம் நடைபெறும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட மேனாங்குடி கிராமத்தில் பாசனத்தாரர் சங்கம் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் மேனாங்குடி பாசன வாய்க்கால் தலைப்பில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு, பணிகள் குறித்து கேட்டறிந்து, வாய்க்கால் தூர்வாரப்படும் அளவீடுகளை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து மூங்கில்குடி கிராமத்தில் மூங்கில்குடி பாசன வாய்க்கால் ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தூர்வாரப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் பாசனதாரர் சங்க பிரதிநிதிகளிடம் கலந்துரையாடி, குடிமராமத்து பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது திருவாரூர் உதவி கலெக்டர் முருகதாஸ், தாசில்தார் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story