கிருஷ்ணகிரியில் வாலிபரிடம் தங்கச்சங்கிலி பறித்த தொழிலாளி கைது


கிருஷ்ணகிரியில் வாலிபரிடம் தங்கச்சங்கிலி பறித்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 21 July 2019 4:15 AM IST (Updated: 20 July 2019 8:54 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் வாலிபரிடம் தங்கச்சங்கிலியை பறித்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி காந்தி நகர் முதல் கிராசை சேர்ந்தவர் மணிசேகரன். இவருடைய மகன் விஜய் (வயது 30). இவர் காந்தி நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் கடையில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் வந்தார். அவர் மணி சேகரிடம் சர்க்கரை கேட்டார். இதனால் கடையில் இருந்த விஜய் சர்க்கரை எடுக்க முயன்றார்.

அப்போது அந்த நபர், திடீரென விஜய் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி சேகரன் மற்றும் விஜய் ஆகியோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை விரட்டி சென்று பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த நபரின் பெயர் பிரகாஷ் (45), கிருஷ்ணகிரி நரசிம்ம சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் என்றும், கூலித்தொழிலாளி என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் நகையையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story