பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 July 2019 11:00 PM GMT (Updated: 20 July 2019 5:27 PM GMT)

பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்,

உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள உபா கிராமத்தில் நிலப்பிரச்சினை தொடர்பான மோதலில் கடந்த 17-ந் தேதி 3 பெண்கள் உள்பட 10 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். 23 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்து வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பிரியங்கா காந்தி தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.

இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவிடாமல் செய்த பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று காலை அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் பல் வேறு கோஷங்களை எழுப்பி னர். இதில் நகர தலைவர் சந்திரசேகர், அமானுல்லா, கணேசன், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story