13 வயது சிறுமி கர்ப்பம்: ‘போக்சோ’ சட்டத்தில் 2 தொழிலாளர்கள் கைது


13 வயது சிறுமி கர்ப்பம்: ‘போக்சோ’ சட்டத்தில் 2 தொழிலாளர்கள் கைது
x
தினத்தந்தி 21 July 2019 4:00 AM IST (Updated: 21 July 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 2 தொழிலாளர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை பழையூரை சேர்ந்தவர்கள் சின்னத்தம்பி (வயது 43). மணி (23). கூலித்தொழிலாளர்கள். உறவினர்களான இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அதனை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளனர்.

இதனால் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் சொல்லவில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் அந்த சிறுமியை பலமுறை தங்களின் ஆசைக்கு இரையாக்கினர். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தாள். இந்த நிலையில் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவளை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் அதுகுறித்து விசாரித்தனர். அப்போது அழுதபடியே மணி, சின்னத்தம்பி ஆகியோரால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி கூறியுள்ளாள்.

இதையடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து சின்னத்தம்பி, மணி ஆகியோர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.

Next Story