இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 20 July 2019 10:45 PM GMT (Updated: 20 July 2019 7:43 PM GMT)

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னதாராபுரம் போலீஸ் நிலையம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தை சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக கரூர் ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால் சாலை விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எனினும் சிக்னலில் நின்று செல்வது, மிதவேகமாக செல்வது, நிர்ணயிக்கப்பட்ட எடையினை கனரக வாகனங்களில் ஏற்றி செல்வது என்பன சாலை விதிகளை பின்பற்றி வாகனத்தை இயக்கினால் விபத்துகளை குறைக்க முடியும். அதிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டையும், கார் ஓட்டுனர்கள் சீட் பெல்ட்டையும் கட்டாயம் அணிய வேண்டும். இதன் மூலம் விபத்து உயிரிழப்பினை தடுக்கலாம்.

போட்டிகள்

விபத்தில் உயிரிழப்போருக்கு அது சில நிமிட வேதனைகள் தான். ஆனால் அவரை சார்ந்த குடும்பத்தினர், உறவினர்களுக்கு அது நீண்ட கால வலியை தரும். எனவே இதையெல்லாம் சிந்தித்து பார்த்து சாலையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவியம், பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. இதில் சின்னதாராபுரம் இன்ஸ்பெக்டர் திருமேனி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் விஜயலட்சுமி (மகளிர் மேல்நிலைப்பள்ளி), முத்துசாமி (ஆண்கள் மேல்நிலைப்பள்ளி), முதுகலை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக சின்னதாராபுரம் முக்கிய வீதிகளில் மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற் படுத்தினர். 

Next Story