பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.67 லட்சம் நிதி உதவி; அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார்
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்த 56 பயனாளிகளுக்கு, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.66 லட்சத்து 90 ஆயிரம் நிதி உதவியை அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார்.
காரைக்கால்,
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், காரைக்கால் மாவட்டம் முழுவதும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்த 56 பயனாளிகளுக்கு, வீடு கட்டுவதற்கான நிதி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவகலத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி மொத்தம் 56 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு நிதி உதவிக்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசும்போது “பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 56 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.66 லட்சத்து 90 ஆயிரம் நிதி உதவிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணம், பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நிதி உதவி பெற்ற பயனாளிகள் அனைவரும் விரைந்து வீடு கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குடிசைமாற்று வாரிய இளநிலை பொறியாளர் சிவா மற்றும் அதிகாரிகள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story