மாவட்ட செய்திகள்

அக்கரப்பாக்கம் ஏரியில் புதைமணலில் சிக்கி தொழிலாளி சாவு மற்றொருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + Stuck in quicksand The worker dies Another Admission to the hospital

அக்கரப்பாக்கம் ஏரியில் புதைமணலில் சிக்கி தொழிலாளி சாவு மற்றொருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி

அக்கரப்பாக்கம் ஏரியில் புதைமணலில் சிக்கி தொழிலாளி சாவு மற்றொருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
பெரியபாளையம் அருகே புதைமணலில் சிக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள அக்கரப்பாக்கம் கிராமம் பள்ளக்காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35).இவர் தனது வீட்டை புதுப்பித்து வருகிறார். இதற்காக அக்கரப்பாக்கம் மேட்டுக்காலனியை சேர்ந்த அருள் (வயது 50) என்பவரிடம் மாட்டு வண்டியில் அக்கரப்பாக்கம் ஏரியில் இருந்து மணல் அள்ளி வருமாறு கூறியதாக தெரிகிறது.


இதையடுத்து அருள் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முனுசாமி (வயது 36), பள்ளக்காலனியை சேர்ந்த சீனு (40) ஆகியோருடன் நேற்று அதிகாலை அக்கரப்பாக்கம் ஏரியில் மணல் அள்ள சென்றார். அப்போது புதைமணலில் முனுசாமி சிக்கி கொண்டார். அவரை காப்பாற்ற சீனு முயன்றார். இதில் இருவரும் புதை மணலில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து அருள் ஊருக்குள் ஓடி வந்து நடந்த சம்பவம் குறித்து கூறி புதை மணலில் சிக்கியவர்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். கிராம மக்கள் ஓடிச்சென்று முனுசாமி மற்றும் சீனுவை மீட்டனர். முனுசாமியை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியிலும், சீனுவை தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். முனுசாமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக் காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி நேற்று பரிதாபமாக இறந்து போனார். பலியான முனுசாமிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவி இறந்து விட்டார். இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேடசந்தூர் அருகே, தனியார் பால் நிறுவனத்தில் தொழிலாளி சாவு - சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மறியல்
தனியார் பால் நிறுவனத்தில் இறந்த தொழிலாளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. சிவகிரியில் வாகனம் மோதி தொழிலாளி சாவு
சிவகிரி அருகே வாகனம் மோதி நண்பர் கண் எதிரிலேயே தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3. பணகுடியில் கார் மோதி தொழிலாளி சாவு - டிரைவர் கைது
பணகுடியில் கார் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
4. விக்கிரவாண்டி அருகே, ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
விக்கிரவாண்டி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக செத்தார்.
5. சத்தியமங்கலத்தில் தொடர் மழை: 2 வீடுகளின் சுவர் இடிந்தது; தொழிலாளி சாவு
சத்தியமங்கலத்தில் தொடர் மழையால் 2 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.