ஊத்துக்கோட்டை அருகே நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


ஊத்துக்கோட்டை அருகே நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 July 2019 3:39 AM IST (Updated: 21 July 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வீரராகவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவரது மகன் சிவா (வயது 21). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் ஒருவர் 2 நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.

சிவா அருகில் இருந்து நண்பரின் இறுதி சடங்குக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

அப்போது முதல் சிவா யாரிடமும் பேசாமல் மனஉளைச்சலுடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது சிவா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் அனுமந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story