இடர்பாடுகளில் சிக்கும் விலங்குகளை மீட்க நாட்டிலேயே முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்படும் ‘வாட்ஸ்-அப்’ சேவை ‘புளூ கிராஸ்’ விலங்குகள் நல அமைப்பு தகவல்
‘புளூ கிராஸ்’ சென்னை காப்பகம் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ்-அப் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை,
பேரிடரில் சிக்கும் விலங்குகள் பற்றி தகவல் தெரிவிப்பதற்காக விலங்குகள் நல அமைப்பான ‘புளூ கிராஸ்’ சென்னை காப்பகம் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ்-அப் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி காயம் அடைந்த அல்லது இடர்பாடுகளில் சிக்கும் விலங்குகளை மீட்கும் நடவடிக்கைக்காக 9962998886 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அப்போது, விலங்குகளின் புகைப்படம், அனுப்புனர் பெயர், முகவரி, தொடர்பு எண், மீட்கப்படவேண்டிய விலங்குகள் தற்போது இருக்கும் இடம் உள்ளிட்ட விவரங்களை அதில் குறிப்பிடவேண்டும்.
இந்த சேவை தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 100-க்கும் மேற்பட்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் விலங்குகளை மீட்பதற்காக வாட்ஸ்-அப் மூலமாக தகவல் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து ‘புளூ கிராஸ்’ அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும்போது, ‘புளூ கிராஸ்’ சென்னை காப்பகத்தில் குறைவான ‘லேன்ட்லைன்’ போன்களே உள்ளன. அவசர சமயத்தில் ஒரு நாளைக்கு விலங்குகளை மீட்பதற்காக சுமார் 400 அழைப்புகள் வருகின்றன.
இதனால் இணைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. வாட்ஸ்-அப் சேவை மூலம் விலங்குகள் ஆர்வலர்கள், காயம் அடைந்த மற்றும் இடர்பாடுகளில் சிக்கும் விலங்குகளை மீட்பதற்காக உடனடியாக தங்களுக்கு தகவலை அனுப்பினால், மீட்பதற்கு உதவிக்கரமாக இருக்கும் என்றனர்.
Related Tags :
Next Story