தூசி அருகே போலீஸ் வேன்-ஆட்டோ மோதல் தகராறில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு
தூசி அருகே போலீஸ் வேன் மீது ஆட்டோ மோதியது. அப்போது போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தூசி,
தேனி மாவட்டத்தில் இருந்து காஞ்சீபுரம் அத் திவரதர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட 13 பெண் போலீசார் நேற்று முன்தினம் வேனில் சென்று கொண் டிருந்தனர். தூசி அருகே உள்ள மாங்கல் கூட்ரோடு அருகே வேன் சென்ற போது பின்னால் வந்த ஆட்டோ திடீரென வேன் மீது மோதியது. இதில் வேனின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுபற்றி போலீஸ் வேன் டிரைவர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் ஆட்டோ டிரை வரிடம் கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அங்கிருந்த சில ஆட்டோகாரர்களும் ஒன்று திரண்டு போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டனர்.
இதுகுறித்து தூசி போலீசில் வேன் டிரைவர் ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் தருமன், காண் டீபன், விநாயகம், செல்வம், கோபால், வரதன், தணிகவேல் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story