ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு 1 லட்சம் கடிதம் அனுப்ப கையெழுத்து இயக்கம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு 1 லட்சம் கடிதம் அனுப்ப கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 22 July 2019 4:30 AM IST (Updated: 22 July 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு 1 லட்சம் கடிதம் அனுப்ப கையெழுத்து இயக்கம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடைபெற்றது.

மன்னார்குடி,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு 1 லட்சம் கடிதம் அனுப்பும் போராட்டத்தை வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) நடத்த போவதாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் அறிவித்துள்ளது. அதற்காக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மன்னார்குடி நகரக்குழு சார்பில் மன்னார்குடி பஸ் நிலையம், உழவர் சந்தை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கையெழுத்து இயக்கம்

மன்னார்குடி உழவர் சந்தை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் நகர தலைவர் சார்லஸ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சிவரஞ்சித் முன்னிலை வகித்தார். இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் துரைஅருள்ராஜன் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் அஸ்வினி, நிர்வாகிகள் அரவிந்த், ஆனந்த், ராஜா, மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story