சர்வதேச விமான நிலையத்தில் ரூ.13 கோடி போதைப்பொருளுடன் 2 வெளிநாட்டு பெண்கள் கைது
மும்பை சர்வதேச விமானநிலையத்தில் ரூ.13 கோடி போதைப்பொருளுடன் 2 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
தென்அமெரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு நூதன முறையில் கொகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு முகமை அதிகாரிகள் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து மும்பை வரும் விமான பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த வெள்ளிக் கிழமை மும்பை சர்வதேச விமானநிலையத்தில் போதைப்பொருள் கடத்தி வந்த வெனிசுலா நாட்டை சேர்ந்த வனிசா வின்ஸ் (வயது31), பிரேசில் நாட்டை சேர்ந்த யுர்னிகா எலிமர் (21) ஆகியோர் சிக்கினர்.
இதையடுத்து அதிகாரிகள் அவர்கள் இருவரையும் அதிரடியாக கைது செய்த னர். அவர்கள் திரவ வடிவில் கொகைகன் போதைப்பொருளை கடத்தி வந்திருந்தனர். அதிகாரிகள் வனிசா வின்சிடம் இருந்து 3.18 கிலோ திரவ போதைப்பொருளையும், யுர்னிகா எலிமரிடம் இருந்து 2.19 கிலோ போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.13 கோடி ஆகும்.
இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து, கைது செய்யப்பட்ட 2 பெண்களிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story