மாவட்ட செய்திகள்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம் + "||" + Rainwater Harvesting Awareness Camp

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் வளர்த்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் வளர்த்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சேகர் தலைமை தாங்கினார். வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன், இயற்பியல் துறைத்தலைவர் பாஸ்கரன் ஆகியோர் மழைநீர் சேகரிப்பின் அவசியம், மரம் வளர்த்தலின் அவசியம், நீர் மேலாண்மை குறித்து விளக்கிப்பேசினார்கள். முகாமில் துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் அன்பழகன் வரவேற்று பேசினார். முடிவில் ஆங்கில துறைத்தலைவர் மூர்த்தி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்தார்.
2. நஞ்சைக்காளக்குறிச்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் அன்பழகன் ஆய்வு
நஞ்சைக்காளக்குறிச்சியில் சுகாதாரத்துறை சார்பில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார்.
3. பேராம்பூர் சேதமடைந்த பெரியகுளத்தின் மதகை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
முதல்-அமைச்சர் குறைதீர்க்கும் முகாமில் பேராம்பூரில் சேதமடைந்த பெரியகுளத்தின் மதகை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
4. மயிலாடுதுறையில், நாளை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
5. மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது
மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது.