மழை வேண்டி கொடும்பாவி பூஜை


மழை வேண்டி கொடும்பாவி பூஜை
x
தினத்தந்தி 22 July 2019 4:00 AM IST (Updated: 22 July 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

மழை வேண்டி பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராம மக்கள் நேற்று ஈஸ்வரன் தங்கையாக பெரிய அளவிலான உருவபொம்மையை கொடும்பாவியாக அலங்கரித்து, அதற்கு பூஜை செய்து முக்கிய வீதிகளின் வழியாக இழுத்து சென்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் ஏரி, குளங்கள் வறண்டு தண்ணீரின்றி பரிதாபமாக காட்சியளிக்கின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் மழை வேண்டி பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராம மக்கள் நேற்று ஈஸ்வரன் தங்கையாக பெரிய அளவிலான உருவபொம்மையை கொடும்பாவியாக அலங்கரித்து, அதற்கு பூஜை செய்து முக்கிய வீதிகளின் வழியாக இழுத்து சென்றனர். அப்போது பெண்கள், ஆண்கள் கொடும்பாவியை சுற்றி ஓப்பாரி வைத்து மழை வேண்டி அழுதனர். பின்னர் கிராமத்தின் அருகே உள்ள ஆற்றுப்பாலத்தின் கீழ் கொடும்பாவியை வீசினர். இவ்வாறு செய்தால் மழை பெய்யும் என்பது அந்த ஊர் பொதுமக்களின் ஐதீகம்.


Next Story