அழைப்பு உங்களுக்குத்தான்
.
பண அச்சகம் :
தேவாஸ் நகரில் செயல்படும் இந்திய பண அச்சக நிறுவனத்தில் சூப்பிரவைசர், ஜூனியர் டெக்னீசியன் பணிகளுக்கு 58 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.ஐ.டி., டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை bnpdewas.spmcil.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, வரும் ஆகஸ்டு 2-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
வங்கி :
பிரபல பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் மேனேஜர் ஐ.டி. அதிகாரி பணிக்கு 35 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக் படித்தவர்கள் பி.சி.ஏ., எம்.சி.ஏ. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.bankofbaroda.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு ஆகஸ்டு 2-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
பிரசார் பாரதி :
இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி நிறுவனத்தில் விற்பனைப்பிரிவு அதிகாரி (மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ்) பணிக்கு 60 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை http://www.prasarbharati.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 6-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
அணுசக்தி நிறுவனம் :
இந்திய அணுசக்தி கழக நிறுவனமான என்.பி.சி.ஐ.எல். தற்போது மகாராஷ்டிரா மாநிலம் தாராப்பூரில் உள்ள அணுமின் நிலையத்தில் ஸ்டைபென்டியரி டிரெயினி மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்கள் ஸ்டைபென்டியரி பணிக்கும், டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி. அறிவியல் படிப்பு படித்தவர்கள் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் 3-8-2019-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.npcilcareers.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
ஐ.ஐ.டி. :
புதுடெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் (சிவில்), அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் (சிவில், எலக்ட்ரிக்கல்), ஜூனியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 34 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங், தொழில்நுட்ப படிப்பு படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை https://ecampus.iitd.ac.in/IITDSR-0/login என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, ஆகஸ்டு 5-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதேபோல ஆந்திரா மாநிலம் திருப்பதி ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் (சிவில்), அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் (சிவில், எலக்ட்ரிக்கல்), சேப்டி ஆபீசர், ஸ்டாப் நர்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக், பி.எஸ்சி. படிப்புகள், டிப்ளமோ படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. சில பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் தேவை. ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதி, வயது வரம்பு வேறுபடுவதால் முழுமையான விவரங்களை /iittp.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். ஜூலை 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
கப்பல் பணிமனை :
இந்திய ராணுவத்தின் கடற்படைக்குச் சொந்தமான, கொச்சியில் உள்ள ‘நேவல் ஷிப் ரிப்பேர் யார்டு’, கப்பல் பழுதுபார்க்கும் பணிமனையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 172 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக் மெக்கானிக், டர்னர், வெல்டர், ரேடியோ அண்ட் ரேடார் ஏர்கிராப்ட் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. 21 வயதுக்கு உட்பட்ட ஐ.டி.ஐ. படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை http://www.davp.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு 23-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மற்றொரு அறிவிப்பின்படி உதவியாளர் பயிற்சிப்பணிக்கு 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கான விவரங்களை /www.cochinshipyard.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு வரும் 25-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
எஸ்.பி.ஏ. :
பள்ளி திட்டமிடல் மற்றும் கட்டுமான நிறுவனம் சுருக்கமாக எஸ்.பி.ஏ. எனப்படுகிறது. புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது செக்சன் ஆபீசர், பெர்சனல் அசிஸ்டன்ட், சீனியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராபர், ஜூனியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 34 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டதாரிகள், பிளஸ்-2 படித்தவர்கள், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு 27-6-2019 அன்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விவரங்களை www.spa.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story