தீவட்டிப்பட்டி அருகே கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் சாவு


தீவட்டிப்பட்டி அருகே கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் சாவு
x
தினத்தந்தி 23 July 2019 4:15 AM IST (Updated: 22 July 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

தீவட்டிப்பட்டி அருகே கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓமலூர், 

இமாசலபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 39). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு டேங்கர் லாரியில் கியாஸ் ஏற்றிக்கொண்டு வந்தார். அந்த லாரி தீவட்டிபட்டி அருகே தளவாய்பட்டி காமராஜர் நகர் பகுதியில் இரவு வந்தது. அப்போது டிரைவர் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் டேங்கர் லாரி நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சந்தோஷ்குமார் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் டிரைவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டேங்கர் லாரி பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டது. லாரியில் இருந்து கியாஸ் கசிவு ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story