ஊதிய உயர்வு வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊதிய உயர்வு வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2019 11:00 PM GMT (Updated: 22 July 2019 6:33 PM GMT)

ஊதிய உயர்வு வழங்கக்கோரி திருவாரூரில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

பொது வினியோக திட்டத்துக்கு தனித்துறை அமைக்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும். பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி பணிவரன் முறை செய்ய வேண்டும்.

500 ரேஷன் அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளர் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் குணசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், பொதுக்குழு உறுப்்பினர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொருளாளர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு பேசினார்.

சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவழகன், நிர்வாகிகள் வெங்கடேசன், ராஜீவ்காந்தி, குணசேகரன், சரவணன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story