ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர் அறுவடை தொடக்கம்


ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர் அறுவடை தொடக்கம்
x
தினத்தந்தி 22 July 2019 10:30 PM GMT (Updated: 22 July 2019 7:06 PM GMT)

ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன.

கும்பகோணம்,

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. இதனால் ஆற்றுப்பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். இதனிடையே ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் குறுவை நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டது.

தற்போது இந்த பயிர்கள் கதிர் முற்றிய நிலையில் உள்ளன. இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் குறுவை பயிர் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அறுவடை பணிகளை விரைந்து முடிப்பதற்கும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பருவமழைக்கு முன்பாக...

கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டு கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை பயிரை அறுவடை செய்யும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.

இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக சம்பா சாகுபடி பணிகளை தொடங்குவதற்கும் ஆயத்தமாகி வருகிறார்கள். அறுவடையான நெல்லை தனியார் வியாபாரிகள் மற்றும் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

Next Story