2,906 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்


2,906 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 23 July 2019 3:15 AM IST (Updated: 23 July 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை பகுதியில் 2,906 மாணவர்களுக்கு குமரகுரு எம்.எல்.ஏ. விலையில்லா மடிக்கணினிகள் வழங்கினார்.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை வீடு கட்டும் சங்கத் தலைவர் மணிராஜ், விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செண்பகவேல், உளுந்தூர்பேட்டை கூட்டுறவு சங்க தலைவர் துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாய்ராம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பழனிவேல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 838 மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கினார்.

இதேபோல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 402 மாணவர்களுக்கும், ஆசனூர் மேல்நிலைப்பள்ளியில் 226 மாணவர்களுக்கும், வெள்ளையூர் மேல்நிலைப்பள்ளியில் 358 மாணவர்களுக்கும், களமருதூர் அரசு பள்ளியில் 564 பேருக்கும், சேர்ந்தநாடு அரசு பள்ளியில் 220 பேருக்கும், திருநாவலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 298 மாணவர்களுக்கும் குமரகுரு எம்.எல்.ஏ. மடிக்கணினி வழங்கினார். நிகழ்ச்சியின் போது அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், கூட்டுறவு சங்க தலைவர் மதியழகன், சுப்பிரமணியன், சுப்புராயன், ஆனந்தன், நகர நிர்வாகிகள் திருப்பதி ராஜேந்திரன், ஆறுமுகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story