ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடி வந்தவர் சிக்கினார்; ரூ.11 லட்சம் செல்போன்கள் பறிமுதல்
ரெயில் பயணிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பிலான செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மும்பை,
மும்பை தாராவி பகுதியை சேர்ந்தவர் மைதுர் ரகுமான்(வயது32). சம்பவத்தன்று இவர் தாதர் ரெயில்நிலையத்தில் ரெயிலுக்காக காத்து நின்றுகொண்டிருந்தார். அப்போது கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் இவரது செல்போனை திருடிச்சென்றார்.
இது குறித்து அவர் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் அந்த நபர் தென்மும்பை பகுதிக்கு செல்போனை விற்பனை செய்ய வர உள்ளதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் செல்போன் திருடனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் நாலச்சோப்ராவை சேர்ந்த ஜீத்வசந்த் குமார் (40) என்பது தெரியவந்தது. போலீசார் ஜீத்வசந்த் குமாரிடம் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பிலான நூற்றுக்கணக்கான திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story