மும்பையில் தீயணைப்பு பணியில் ‘ரோபோ’ முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது
மும்பையில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 9 மாடி கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், அதில் சிக்கிய 84 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மும்பை,
மும்பை மாநகராட்சியின் தீயணைப்பு படையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தீயணைப்பு ரோபோவும் முதன் முறையாக இந்த தீயணைப்பு பணியில் ஈடுபட்டது. ரிமோட் மூலம் இயக்கப்பட்ட அந்த ரோபா தீ கொழுந்துவிட்டு எரிந்த இரண்டு மாடிகளை நோக்கியும் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்தது. தீ விபத்தை தொடர்ந்து அங்கு அதிர்ச்சியுடன் கூடிய பொதுமக்கள், இந்த ரோபோவை பார்த்து ரசிக்கவும் செய்தனர்.
இதற்கிடையே தீயணைப்பு பணியில் 150 வீரர்கள் ஈடுபட்டனர். இதில் சாகர் சால்வே (வயது 25) என்ற தீயணைப்பு வீரர் புகைமூட்டத்தில் சிக்கி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதில் மயக்கம் அடைந்த அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story