புகைமூட்டத்தில் சிக்கியதால் உயிர் பிழைப்பதற்காக மாடி படிகளை தேடி அலைந்தோம்; பெண் ஊழியர் உருக்கம்


புகைமூட்டத்தில் சிக்கியதால் உயிர் பிழைப்பதற்காக மாடி படிகளை தேடி அலைந்தோம்; பெண் ஊழியர் உருக்கம்
x
தினத்தந்தி 23 July 2019 4:37 AM IST (Updated: 23 July 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

எம்.டி.என்.எல். அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உயிர் தப்பினர். உயிர் பிழைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

மும்பை, 

மாடிகளில் புகை மூட்டத்தில் சிக்கிய ஊழியர்களையும் தீயணைப்பு படையினர் காப்பாற்றி கொண்டு வந்தனர். அப்போது பெண் ஊழியர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.

இதுபற்றி புகைமூட்டத்தில் சிக்கி தப்பிய பெண் ஒருவர் கூறுகையில், ‘‘தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் கட்டிடத்தை விட்டு வெளியேற முடிவு செய்தோம். ஆனால் சில நொடிகளிலேயே நாங்கள் இருந்த அறையை புகை மண்டலம் சூழ்ந்து விட்டது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உயிரை காப்பாற்றி கொள்வதற்காக மாடி படிகளை தேடி அலைந்தோம். ஆனால் புகைமூட்டம் காரணமாக படி இருக்கும் இடமே தெரியவில்லை. அனைத்தும் மங்கலாகவே தெரிந்தது. அந்த நேரத்தில் தீயணைப்பு படையினர் உள்ளே வந்து எங்களை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்’’ என்றார்.

Next Story