ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை: அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது
ஆடி முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. கொழுக்கட்டை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஆரல்வாய்மொழி,
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடிமாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விருப்பமான பதார்த்தங்களை படைத்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக் கை. அதனால் ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் குறிப்பாக பெண்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும்.
நாகர்கோவிலை அடுத்த தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று காலையிலிருந்தே பெண்கள் குவியதொடங்கினர் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் வந்து இருந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருள்களால் கூழ், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் படைத்து அம்மனை வழிபட்டனர்.
கோவில் வளாகம் நிரம்பி வழிந்ததால் பக்கத்தில் உள்ள தோப்புகளிலும் பெண்கள் உணவு பண்டங்களை தயாரித்தனர். 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் அங்குள்ள பிற சன்னதிகளான கணபதி, முருகன், மாடன், அகஸ்தியர் ஆகியவற்றிற்கும் தீபாராதனை நடைபெற்றது.
அவ்வையார் அம்மன் கோவிலுக்கு நாகர்கோவிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலிலும் ஆடி முதல் செவ்வாயையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
முப்பந்தல் ஆல மூடுஅம்மன் கோவிலில் பூக்குழி கொடைக்கான கால்நாட்டு விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.
இக்கோவில்களுக்கும் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Tags :
Next Story