புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யா, ரஜினி போன்றவர்கள் தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படுகின்றனர் அர்ஜூன் சம்பத் பேட்டி


புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யா, ரஜினி போன்றவர்கள் தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படுகின்றனர் அர்ஜூன் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 23 July 2019 11:15 PM GMT (Updated: 23 July 2019 7:31 PM GMT)

புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யா, ரஜினி போன்றவர்கள் தி.மு.க.வின் ஊதுகுழ லாக செயல்படுகின்றனர் என திருவாரூரில், அர்ஜூன் சம்பத் கூறினார்.

திருவாரூர்,

இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் பார்த்திபன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலரால் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்்ஜூன் சம்பத் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாடுகளை பற்றி அவதூறாக கருத்துக்கள் வெளியிட்டது தொடர்பான பிரச்சினையில் நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சி செயலாளர்் பார்த்திபன் தாக்குதலுக்கு ஆளாகியுள் ளார். அவருக்கு தரமான சிகிச்சை வழங்க முதல்-அமைச்சர்் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய கல்வி கொள்கையின் நோக்கம் தரமான கல்வி, இலவச கல்வி, கட்டாய கல்வி கொடுக்க வேண்டும் என்பதுதான். புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கைகளை படிக்காம லேயே நடிகர்்கள் சூர்யா, ரஜினிகாந்த் மற்றும் திரைப்படத்துறையினர் தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படுகின்றனர்். புதிய கல்வி கொள்கையின் நோக்கமே நவோதயா போன்ற தரமான கல்வியை போதிப்பது தான். தமிழக மாணவர்்களை இந்திய அளவிலான தேர்வுகளை எழுத திறன் கொண்டவர்களாக மாற்றும் நோக்கம் உடையதாகும்.

புதிய கல்வி கொள்கை குறித்து அனைவரும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் இந்த கல்வி கொள்கை திருத்தத்துக்கு உட்பட்டது. அனைவரும் தங்களது கருத்தை இணையத்தின் வாயிலாக தெரிவிப்பதற்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் உள்ளது. இந்த நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து தெரியாமலேயே செய்கின்ற விமர்்சனங்களை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story