சாலைகளை சீரமைக்கக் கோரி தோப்புக்கரணம் போட்டு மனு கொடுக்க வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்
ராமேசுவரம் பகுதியில் சாலைகளை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தோப்புக்கரணம் போட்டபடி மனு கொடுக்க வந்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டு சாலைகள் அனைத்தும் சேதமடைந்து காட்சியளித்து வருவதால் உடனடியாக சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், அனைத்து வார்டுகளிலும் தட்டுப்பாடின்றி முறையாக குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அலுவலக வாசலில் இருந்து ஆணையாளர் அறை வரையிலும் தோப்புக்கரணம் எழுப்பிய படியே சென்று நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அப்போது ஆணையாளர் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்துள்ள பகுதிகளில் விரைவில் சாலை பணிகள் தொடங்க உள்ளதாகவும், குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். தோப்புக்கரணம் போட்டு நூதனமுறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்க வந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story