மானாமதுரை வைகையாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு
மானாமதுரை வைகையாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானாமதுரை,
மானாமதுரை நகரின் மத்திய பகுதியில் உள்ள வைகையாறு தெற்கு மற்றும் வடக்கு நோக்கி அமைந்துள்ளதால் இந்த ஆறு நகரை இரண்டாக பிரித்து மானாமதுரை கிழக்கு கரை, மேற்கு கரை என அழைக்கப்படுகிறது. இந்த இரு கரை பகுதியில் உள்ள மக்கள் வைகையாற்றை கடந்து செல்வதற்கும், வாகன போக்குவரத்துக்கும் மானாமதுரை குண்டு ராயர்தெரு, அண்ணாசிலை ஆகிய இரு பகுதிகளை இணைக்கும் வகையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கட்டப்பட்ட உயர் மட்டப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுதவிர சமீபத்தில் இந்த பாலத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பெரம்பலூர்-மானாமதுரை சாலை மேம்பாட்டு திட்டத்தில் தல்லாகுளம் முனியாண்டி கோவில், அரசகுழி கிராமம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் மானாமதுரை வைகையாற்றுக்குள் உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் வாகனங்கள் மானாமதுரை நகருக்குள் வந்து செல்லாமல் சிவகங்கை செல்வதற்கு இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
வைகையாற்றுக்குள் தண்ணீர் வரும் காலங்களில் மானாமதுரை கிழக்கு கரை பகுதியில் உள்ள கன்னார்தெரு, கோவில் தெரு, மூங்கில் ஊருணி பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் தேவைகளுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மேற்கு பகுதிக்கு செல்வதற்கு நகருக்குள் வந்து அண்ணாசிலை மேம்பாலத்தைத்தான் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர மானாமதுரையில் உள்ள மேற்கு பகுதி மக்களும் இவ்வாறு தான் சென்று வர வேண்டிய நிலை இருக்கிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பயண நேரமும் கூடுகிறது. மேலும் தண்ணீர் வராத காலங்களில் வைகையாற்றில் மணல் இல்லாமல் தரையாக உள்ளதால் இரு பகுதி மக்களும் தங்களது வாகனங்களில் வைகையாற்றுக்குள் கடந்து சென்று வரும் நிலை உள்ளது. இதனால் மானாமதுரை வைகையாற்றுக்குள் கன்னார்தெரு, பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொது தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறியே ஆதரவு கேட்டு வந்தனர். அதன் பின்னர் அவர்கள் வெற்றி பெற்றதும் இதை கண்டுகொள்வது இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இந்த தரைப்பாலம் திட்டம் என்பது இப்பகுதி மக்களுக்கு கனவாகி போன நிலையில் இருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானாமதுரை வைகையாற்றுக்குள் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.9 கோடியே 37 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தரைப்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து இப்பகுதி மக்கள் இந்த அறிவிப்பை வரவேற்று உள்ளனர்.
இதுகுறித்து மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் கூறியதாவது:-
மானாமதுரை நகரில் வைகையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. நடந்து முடிந்த மானாமதுரை தொகுதி இடைத்தேர்தல் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த வைகையாற்றில் தரைப்பாலம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி இந்த பாலம் அமைக்க ரூ.9 கோடியே 37 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
மேலும் மானாமதுரை பகுதியில் உள்ள அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். தற்போது இந்த தரைப்பாலம் 330 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள். விரைவில் இந்த பாலம் அமைப்பதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story