யூனியன் அலுவலகங்களில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் யூனியன் அலுவலகங்களில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
விருதுநகர் யூனியன் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாநில தலைவராகவும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவராகவும் உள்ளார்.
இவர் கடந்த மே மாதம் 31-ந் தேதி ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைக் கண்டித்தும், அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்டத்தில் யூனியன் அலுவலகங்களில் ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து, யூனியன் அலுவலக கூட்டரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட பொருளாளர் சுப்பையா, வட்டார தலைவர் மணிகண்ட பிரகாஷ், செயலாளர் சிவராமகிருஷ்ணன், பொருளாளர் திவான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெறிச்சோடிய அலுவலகங்கள்
இதேபோன்று கயத்தாறு, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், விளாத்திகுளம், புதூர், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட யூனியன் அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பல்வேறு தேவைகளுக்காக யூனியன் அலுவலகங்களுக்கு சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Tags :
Next Story