வானவில் : ஸ்கோடா ரேபிட் ஸ்பெஷல் எடிஷன்
செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா தனது ரேபிட் மாடலில் லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
நடுத்தர ரக செடான் ரகமான இந்த மாடலின் விலை ரூ.6.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. பாதுகாப்பு அம்சமாக முன்புறத்தில் 2 ஏர் பேக்குகள் உள்ளன. ஏ.பி.எஸ். (ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம்) உள்ளது.
சிறப்பு அம்சமாக ரியர் பார்க்கிங் சென்சார், உள்புறத்தில் ஆன்டிகிளேர் (கண் கூசாத) ரியர் வியூமிரர், பின்புற கண்ணாடியில் ஏ.சி. காரணமாக பனி மூட்டம் போல படிவதை அகற்றும் டிபாகர் உள்ளது. முன்புற இருக்கையில் சீட் பெல்ட்கள் மூன்றுவித அட்ஜெஸ்ட்மென்ட் வசதியோடு வந்துள்ளது. அத்துடன் கரடு, முரடான சாலையில் பயணிக்க ஏதுவாக வாகனத்தில் மாற்றம் செய்யும் வசதி, என்ஜின் இம்மொபிலைசர் ஆகியனவும் இதில் உள்ளன.
Related Tags :
Next Story